நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

தை வெள்ளி - 05


திருமகளே வருக!..


மலரின் மேவு திருவே! - உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும் - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்!...

கமல மேவு திருவே! - நின்மேல்
காதலாகி நின்றேன்.
குமரி நின்னை இங்கே - பெற்றோர்
கோடி  இன்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன் - என்மேல்
அன்பு கொள்வை யாயின்
இமய வெற்பின் மோத - நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்!...

செல்வம்  எட்டும்  எய்தி - நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்;
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்!...
                                 - மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..