நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 11, 2013

திருக்கருகாவூர் 1

பசித்திருந்த முனிவர்  கோபத்துடன்  இட்ட சாபத்தின்படி வேதிகை எனும் பெண்னின் - கர்ப்பத்தினின்று  கரு - நழுவி விழுந்தது.

அம்பிகை தானே தாதியாய் நின்று, தாயுமாய் நின்று -
வேதிகையின் கர்ப்பத்திலிருந்து நழுவிய கருவினைக் கலசத்தினுள் ஏந்திக் கொண்டாள்!... 


கார்முகில் போல் கருணைமழை சுரக்கும் தாய் - ஓர் அபலையின் கருவினைக் காத்து   - கர்ப்பத்தை ரக்ஷித்து அருளினாள்..

திருத்தலம் - திருக்கருகாவூர்
இறைவன் - ஸ்ரீ முல்லைவனநாதர்
அம்பிகை - கர்ப்பரக்ஷாம்பிகை
தல விருட்சம் - முல்லை
தீர்த்தம் - பாற்குளம்

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தரிசித்த திருத்தலம்..

முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்த யானைமறுக உரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூரெம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.. (3/46)
- திருஞானசம்பந்தர் -

குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளுங்கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தைதானே.. (6/15)

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்
பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி நுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும்
கண்ணாம் கருகாவூர் எந்தைதானே.. (6/15)
- திருநாவுக்கரசர் - 


கர்ப்ப ரக்ஷாம்பிகையாக
நின்று நல்லருள் புரியும் திருத்தலம்
திருக்கருகாவூர்

கருகாவூர் மேவிய கற்பகமே போற்றி!.. போற்றி!..
* * *

6 கருத்துகள்:

  1. திருக்கருகாவூர் ஒருமுறை சென்றதுண்டு... சொன்னவிதம் பரவசப்படுத்தியது... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. திருக்கருகாவூருக்கு அடிக்கடி வருவதுண்டா?....ஏனெனில் அன்னையின் அருள் வருக.. வருக.. என்று அழைக்கும்!...

    பதிலளிநீக்கு
  3. பலமுறை சென்ற தலம்தான். எனினும் அறியாத பல செய்திகளை சுவைமிகு எழுத்தில் வழங்கியமைக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  4. அன்புடையீர்!... தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள..

    வணக்கம். உங்கள் பதிவிற்குள் வரத்தெரியாமல் இருந்தது. இப்போதுதான் அதற்குரிய வழியைக் கண்டுபிடித்தேன். இனித் தொடர்ந்து வருவேன். தவிரவும் நீண்ட நாட்களாகக் கணிப்பொறி பழுது வேறு. இப்போதுதான் சரியானது. அழகான நடையில் வரலாறு சொல்லியிருக்கிறீர்கள். சின்னக் குழந்தைகளும் படிப்பதற்கேற்றவாறு படமும் கருத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அன்புக்குரிய ஹரணி அவர்களே!.. வருக.. வருக.. உங்களின் வருகை கண்டு மிகவும் மகிழ்வெய்தினேன்!.. தங்களின் அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி!.தமிழால் இணைந்தோம்!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..