நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 08, 2013

ஸ்ரீ மஹாலக்ஷ்மி

சர்வ மங்கலங்களையும் தரும் நவராத்திரி வழிபாடுகளின் முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா தேவிக்கு உரியன. இந்த நாட்களில், 

வழிபடும் அன்பர்களின் துயர்களையும் துன்பங்களையும் தொலைத்து அழிப்பவள் ஸ்ரீ துர்கா. நம்முள் மண்டிக் கிடக்கும் தீய குணங்களை நாமே அழிக்கும்படியான திறமையை நமக்கு அருள்பவள் ஸ்ரீ துர்கா. 


இனி தொடரும்  வழிபாடுகளில் அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு உரியவை. 

ஸ்ரீமஹாலக்ஷ்மி தான்,  இக வாழ்வில் நமக்கு வேண்டும் வளங்களையும் நலங்களையும் வழங்கி -  நம் வாழ்வினை  - நடத்துபவள். 

வேண்டும் வரங்கள் - வளங்கள் எனில்,

நாம் வேண்டியதை அல்ல!.. நமக்கு வேண்டியதை!..

நமது பூர்வ ஜன்மத்தின் சஞ்சித ப்ராரப்த வினைகளை அனுசரித்து - நமக்கு எவற்றை வழங்க வேண்டுமோ அவற்றை வழங்கி அருள்வாள். 

அதன்படி எவற்றையெல்லாம் நாம் அனுபவிக்கும் படியான விதி இருக்கின்றதோ - அதை நாம் அனுபவிக்க வேண்டும். 

இப்படி அனுபவிக்கும் வேளையில் - அல்லலும் துன்பமும் துயரமும் தொடருமேயானால் - அவற்றில் இருந்து நாம் மீள்வதற்கு பெரிதும் உதவியாய்த் திகழ்வன - வழிபாடுகள். 


விதியின்  வசமாக தொல்லைகளும் துயரங்களும் ஒரேயடியாகத் தொலைய வில்லை எனினும் - இடையறாத அன்பின் வழிபாடுகளினால் - விதியின் இறுக்கம் இளகுகின்றது. 

ஒருவன் அளவு கடந்த வறுமையிலும் தடுமாறாது, தடம் மாறாது நேர்வழியில் செல்வானாயின் அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது பொருள். 

அதற்காகத் தான் வறுமையிலும் செம்மை என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

அத்தகைய மனோதிடம் அமையுமானால்  - சற்றும் குறைவில்லாமல் அருள் மழை பொழிவாள் என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகள் உள்ளன.

தமக்கென்று வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியை - பவதி பிக்ஷாம் தேஹி என வந்த பாலகனுக்கு இட்டார் அந்தப்பெண்.


''பிக்ஷை ஏற்க வந்திருக்கும் பாலனுக்கு இடுவதற்கு இதை விட நல்லதாக வேறு ஒன்றும் இல்லையே..'' - என்று, மனவருத்தத்துடன் எண்ணிய எண்ணம் தான் - அன்று அங்கே பொன்மழை பெய்யக் காரணமாக இருந்தது. 

அத்தகைய மனோபாவம் அவளாலே அருளப்படுவது. 

இத்தகைய பெருமை வாய்ந்த ''கனகதாரா ஸ்தோத்ரம்'' - இன்றும் ஞானப் பொக்கிஷமாக விளங்குகின்றது எனில் அது மிகையில்லை.

நவராத்திரிப் பெருவிழா - தேசம் எங்கிலும் வேறு வேறு வழக்கங்களுடன் கொண்டாடப்பட்டாலும், நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருளை வேண்டியே நடைபெறுகின்றன. 

அவளுடைய அம்சங்களான ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ சரஸ்வதியின் அருள் வேண்டியே நடைபெறுகின்றன. 

இந்த அளவில் சர்வலோக சரண்யை ஆன அம்பிகையை ஒன்பது நாட்களும் வழிபடும் போது -


முதல் மூன்று நாட்கள்  - வீரம் , மனோதைரியம்  இவற்றை அருளும்  
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எனவும்,

அடுத்த மூன்று நாட்கள் - குன்றாத நலங்களையும் வளங்களையும் அருளும் 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனவும்,

கடைசி மூன்று நாட்கள் - கல்வி,  நல்லறிவு,  ஞானம் இவற்றை அருளும்
ஸ்ரீ மஹாசரஸ்வதி எனவும், வணங்கி நிற்கின்றோம்.

இல்லங்களில் மங்கலங்கள் தழைக்கவும் அனைவருடைய நலன் கருதியும் - வழிபாடுகள் செய்வதில் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். 

அப்படிச் செய்யும் வழிபாடுகளில் மற்ற பெண்களையும் அழைத்து அவர்களுக்கு அன்புடன் - தாம்பூலம், பிரசாதம் என வழங்கி மகிழும் போது அங்கே அன்னை மஹாலக்ஷ்மியும் மகிழ்கின்றாள். 

இப்படி தாம்பூலம் பிரசாதம் முதலானவற்றை வழங்கும் போது - முகம் அறியாதவர்களுக்கு வழங்கும் போது - கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகின்றன. 


இப்படி அன்பின் வழி நின்று கொடுப்பதும் கொள்வதும் நிகழும் போது குற்றங்கள் அழிகின்றன. குறைகள் அகலுகின்றன. குலம் விளங்குகின்றது.

இப்படி நிகழ்த்தும் வழிபாடுகளில் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி  மனம் பூரிக்கின்றாள். ஏனெனில் அவள் - சாந்தமும் சாந்நித்யமும் உடையவள். 

உலகெங்கும் நாம் காணும் அனைத்திலும் வியாபித்து விளங்குபவள். சர்வ மங்கலங்களுக்கும் அவளே காரணி. 

அந்த காரணியை - பரிபூரணியைக் குறித்த ஸ்தோத்திரங்கள் பற்பல. 

அப்படிப்பட்டவற்றுள் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பதினாறு அம்சங்களைக் குறித்த சோடஷ மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம் சிறப்பானது. 

மேலும், தேவேந்திரன் - ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் போற்றித் துதித்த அஷ்டகமும் சிறப்பானது. 

இந்த இணைப்பில் - தேவேந்திரன்  துதித்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


மங்கலகரமான நவராத்திரியின் நடுநாயகமாகத் திகழும் மூன்று நாட்களில்,
ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போற்றி வணங்கி, நலங்களும் வளங்களும் பெறுவோம்!.. 

ஓம் ஆதி லக்ஷ்மியே போற்றி..  ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி.. ஓம் கஜ லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் சந்தான லக்ஷ்மியே போற்றி..  
ஓம் விஜய லக்ஷ்மியே போற்றி..

ஓம் வித்யா லக்ஷ்மியே போற்றி..  ஓம் தன லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் அன்ன லக்ஷ்மியே போற்றி.. ஓம் அம்ருத லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் அனந்த லக்ஷ்மியே போற்றி..  
ஓம் ஆனந்த லக்ஷ்மியே போற்றி..

ஓம் க்ருபா லக்ஷ்மியே போற்றி..  ஓம் கீர்த்தி லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் சுப லக்ஷ்மியே போற்றி.. ஓம் தீப லக்ஷ்மியே போற்றி.. 
ஓம் யோக லக்ஷ்மியே போற்றி..  
ஓம் மகா லக்ஷ்மியே போற்றி..போற்றி!..

சர்வமங்கல மாங்கல்யே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகி நாராயணி நமோஸ்துதே!..

8 கருத்துகள்:

  1. நவராத்திரியில் மகாலக்ஷ்மி பற்றிய பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.சரவணன்.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. ஒவ்வொரு நாளின் விளக்கம் மிகவும் அருமை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. மிகவும் லக்ஷ்மிகரமான பதிவுக்கு ந்ன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களது வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. அன்பின் வழி நின்று கொடுப்பதும் கொள்வதும் நிகழும் போது குற்றங்கள் அழிகின்றன. குறைகள் அகலுகின்றன. குலம் விளங்குகின்றது.

    இப்படி நிகழ்த்தும் வழிபாடுகளில் அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மனம் பூரிக்கின்றாள். ஏனெனில் அவள் - சாந்தமும் சாந்நித்யமும் உடையவள்.

    சந்நித்யம் திகழும் லஷ்மிகரமான பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகையும் கருத்துரையும் கண்டு களிப்படைந்தேன்!.. மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..