நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 26, 2015

மார்கழித் தென்றல் - 10

குறளமுதம்

உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்..(0294) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 10

திவ்ய தேசம் -  மன்னார்குடி
அபிமானத் திருத்தலம்


செண்பகாரண்யம் என்றும்
தக்ஷிணதுவாரகை என்றும்
வழங்கப்படும் திவ்ய க்ஷேத்ரம்

எம்பெருமான் - ஸ்ரீ வாசுதேவன்
உற்சவர் - ஸ்ரீராஜகோபாலன்
தாயார் - ஸ்ரீ சண்பகலக்ஷ்மி
உற்சவர் - ஸ்ரீ செங்கமலவல்லி

ஸ்ரீ சுயம்பு விமானம்
நின்ற திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.



பசுவுங்கன்றும் அவனது பாதத்தின் அருகில்..
பசுவுங்கன்றும் நாமாகி இருக்கின்றோம்..
நமக்கு அவனே நல்மேய்ப்பன்..

மேய்ப்பவன் அவனாக இருக்கும்போது
பசுக்களாகப் பிறக்கவே ஆசை..



மன்னை ராஜகோபாலன்
சோழ மண்டல மக்களின் 
மனதிற்கினிய 
செல்லப்பிள்ளை..



கோயிலும் குளமும் கொடிமரமும் திருவிழாவுமாக
கோலாகலத்திற்குக் குறைவில்லாத திருத்தலம்..
***

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
 அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்

இன்று சீர்மிகும் திருவாதிரை
திருத்தலம் - திருஆரூர்


இறைவன் - ஸ்ரீ வன்மீக நாதர்
விடங்கர் - ஸ்ரீ தியாகராஜர்
அம்பிகை - ஸ்ரீ அல்லியங்கோதை
ஸ்ரீ கமலாம்பிகை

தீர்த்தம் - கமலாலயம்
தலவிருட்சம் - பாதிரி



ஆதியான திருத்தலம் என போற்றப்படுவது.

பஞ்சபூதங்களுள் மண்ணுக்குரிய தலம்
விடங்கத் தலங்கள் ஏழினுள் முதலாவதானது..

சோழ சக்ரவர்த்தி
முசுகுந்தர் ஆட்சி புரிந்த திருநகர்..

தவறிழைத்த தன்மகனைத் தேர்க்காலில் இட்டு 

பசுவிற்கு நீதி வழங்கிய 
மனுநீதிச் சோழ மாமன்னன் ஆட்சி செய்த திருநகர்..



திருஒற்றியூரில் பார்வையிழந்த சுந்தரர்
காஞ்சியில் இடக்கண்ணிலும்
ஆரூரில் வலக்கண்ணிலும் 
பார்வை பெற்றனர்..


தியாகேசர்
சுந்தரரின் பொருட்டு பரவை நாச்சியார் 
திருமனைக்குத் தூது நடந்தருளிய திருத்தலம்..

ஈசன் எம்பெருமானை
ஆழித்தேர் வித்தகர்
எனப் புகழ்கின்றார் - திருநாவுக்கரசர்..


சோழர்கள் முடி சூடிக் கொள்ளும் திருநகர்.. 

எண்ணரும் சிறப்புகளை உடைய திருத்தலம்..

பாடிப்பரவியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்கவாசகர்.
மேலும் பல புண்ணியர்கள்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்.


ஒருவனாய் உலகேத்த நின்றநாளோ
ஓருருவே மூவுருவம் ஆனநாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால்விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெறித்தநாளோ
மான்மறிக் கையேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர்க் கோயிலாக் கொண்டநாளே!.. (6/34)

***

இன்று - திரு ஆதிரைத் திருநாள்..

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
பத்தாம் திருப்பாடல்



புவனியிற் போய்ப்பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!..

திருப்பள்ளி எழுச்சி திருப்பாடல்கள் 
இந்த அளவில் நிறைவுறுகின்றன..  

திருவெம்பாவை
19 - 20

உங்கையிற் பிள்ளை அடைக்கலமென்
றங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால் 
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லாதார் தோள்சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறெமக்கேலோர் எம்பாவாய்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!..


திருவெம்பாவை திருப்பாடல்கள்
இந்த அளவில் நிறைவுறுகின்றன..  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***.

8 கருத்துகள்:

  1. மார்கழித் தென்றலின் 10 ஆம் தேவாரத்துடன் அறிந்தேன் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எத்தனை பேர் உரை எழுதி இருந்தாலும் உங்கள் பதிவில் பாட்டுடன் பதவுரையும் இருந்தால் இன்னும் சிறக்கும் என்றே தோன்றியதை கூறுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      திருப்பாவைக்கு உரை சொல்லும் திறம் எனக்கிருப்பதாகத் தோன்றவில்லை

      வேறு விதமாக யோசித்து வைத்திருந்தேன்..
      வரும் நாட்களில் கூடி வரவேண்டுகின்றேன்.

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான தொகுப்பு.தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..