நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 05, 2016

நல்ல மனம் வாழ்க..

நிகழாண்டின் பிப்ரவரி மாதம் - இருபத்தைந்தாம் நாள்..

மீண்டும் ஒருமுறை - மகாமகத் திருக்குளத்திற்கு என் தாயுடன் சென்ற நாள்..

எண்பது வயதான அவர்களை - திருக்குளத்தின் கரையில் இருத்தி -
வணங்கி மகிழ்ந்த நாள்..

அதன் பின் - தெய்வ தரிசனம் செய்து வலம் வந்த நாள்..

அந்த நாள் - என் அன்பு மகளின் பிறந்த நாளும் கூட!..

அந்நாளின் இனிய நினைவுகளுடன் வேறொன்றும் சேர்ந்து கொண்டது..

என்னையும் -  தம்முடன் கொண்டனர் கற்றிந்த மேலோர்..

தமிழவேள் உமாமகேசுவரனார்

அவர்கள் தாம் -

தஞ்சை - கரந்தை உமாமகேசுவரனார் மேனிலைப் பள்ளியின் கணித ஆசிரியர்
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார்.,

மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்
அன்புக்குரிய வெ. சரவணன்.,

அன்றைய தினம் குடந்தையைத் தரிசித்து விட்டு - மதிய வேளையில் தஞ்சைக்குத் திரும்பினேன்..

கடந்த ஆண்டு விடுமுறையின் போது - கரந்தை ஜெயக்குமார் அவர்களைச் சந்திக்க இயலாமற்போனது..

சமீபத்திய விடுமுறையின் போது - நிச்சயம் அவரைச் சந்தித்தாக வேண்டும்..

அந்த ஆவலுடன் - கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தினுள் நுழைந்து - ஆசிரியர்களின் ஓய்வறைக்குச் சென்று விசாரித்தபோது -

வெளியே சென்றிருக்கின்றார்.. வந்து விடும் நேரம் தான்!.. - என்றார்கள்..

தலைமையாசியர் அலுவலகத்திற்கு வெளியில் இருந்த பலகையில் அமர்ந்து -  பட்டாம்பூச்சிகளாகக் கல்வி பயின்று கொண்டிருந்த இளஞ்சிறார்களை நோக்கிக் கொண்டிருந்த வேளையில் -

தலைமையாசிரியர் திரு வெ. சரவணன் அவர்கள் என்னைக் கண்டு கொண்டு வாஞ்சையுடன் அழைத்து அலுவலகத்தினுள் அமரச் செய்து அளவளாவியதை மறக்க இயலாது..

அத்துடன், நொடிப் போதில் - தொலைபேசி வாயிலாக - திரு. ஜெயகுமார் அவர்களுக்கு எனது வருகையையும் தெரிவித்தார்..

அடுத்த சிறுபொழுதில் - முகமலர்ச்சியுடன் திரு. ஜெயகுமார் அவர்கள்...

அவர் தம் கைகளில் -
மறுநாள் வெளியிடப்பட இருக்கும் எனும் நூலின் பிரதிகள்..


மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது தான் - உமாமகேசுவரம் நூலினைப் பற்றிக் கூறினார்..

கேப்டன் ராஜன்
அதற்கு அடித்தளம் அமைத்தவர் திருமிகு. கேப்டன் ராஜன் அவர்கள் என்பதை அறிந்ததும் எனக்குள் ஆனந்த அதிர்வுகள்..


என்னுள் இரட்டிப்பு மகிழ்வானது...


காரணம் -

அன்பிற்குரிய ராஜன் அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்..

மாசற்ற அன்பிற்கு இருப்பிடமானவர்..



தாம் பயின்ற பள்ளியை நிறுவிய மாமனிதர் - என்ற பெருமையுடன்,
தமிழவேள் த. வே. உமா மகேசுவரனார் அவர்களின் நினைவினைப் போற்றி நூல் வெளியிடும் பாங்கு திரு. ராஜன் அவர்களுக்கே உரியது..

செஞ்சோற்றுக் கடன் என்று தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்த்த
திரு. ராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!..

திரு. ராஜன் அவர்களுக்கு சிறப்பு
மறுநாள் வெள்ளிக்கிழமை மாலையில் நிகழ இருக்கும் விழாவினுக்கு என்னையும் அன்புடன் அழைத்தனர்..

இவ்விழாவினைப் பற்றி முன்னதாக நான் அறிந்திருக்கவில்லை...

ஞாயிறன்று மாலை நான் சென்னைக்குப் புறப்பட்டாக வேண்டும்..

திங்களன்று காலையில் அபுதாபி வழியாக குவைத்திற்குப் பயணம்..

இருக்கும் சில நாட்களுக்குள் -
வெள்ளியன்று வேறொரு வேலையும் காத்திருந்தது..

சிறப்புறு விழாவினில் கலந்து கொள்ள இயலாது - என
எனது சூழ்நிலையினைத் தெரிவித்தேன்..


எனது நிலையினைப் புரிந்து கொண்டதுடன்
உமாமகேசுவரனாரின் சிறப்புகளைப் பேசும் நூலினை வழங்கி மகிழ்ந்தனர்..

அந்த அளவில் -
அன்புடை நெஞ்சங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்..

மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும் -
குறை ஒன்று இருந்தது..

முனைவர் பாலமகி அவர்களைச் சந்திக்க இயலாதது..

ஆனாலும் - நான் பேருந்திற்காகக் காத்திருந்த வேளையில் -
என்னைக் கடந்து சென்ற பேருந்தில் என்னைப் பார்த்தபடியே சென்றிருக்கின்றார்கள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்..

திரு. ஹரணி அவர்களுடன் ஜெயகுமார், சரவணன்

மேலும் -
அன்புக்குரிய முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களையும்
அன்புக்குரிய முனைவர் ஹரணி அவர்களையும்
சந்திக்க இயலாதது மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கின்றது..

காலம் இனியொரு நல்வாய்ப்பினை வழங்குவதாக!..

திங்கட்கிழமை பகலில் அபுதாபி விமான நிலையத்தில் குவைத் விமானத்திற்காகக் காத்திருந்த வேளையில் -

அங்கிருந்த (Free Internet Zone) கணினியில் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தளத்தில் - உமாமகேசுவரம் நூல் வெளியீட்டு விழாவின் செய்திகளையும் கண்டறிந்தேன்..

ஆன்மீகச் செம்மல் என்று - அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தமது பதிவில் குறித்திருந்ததைக் கண்டேன்..

அவ்வாறு குறிக்கப்பட்டது அன்பின் மிகுதியால்!..

மற்றபடி -

ஆன்மீகப் பெருவெளியில் சின்னஞ்சிறு துகள் - நான்..

அவ்வளவே!..

அத்துடன், விமான நிலையத்தினுள் இருந்தபடியே -
அன்புக்குரிய கில்லர்ஜி அவர்களுடனும் உரையாடி மகிழ்ந்தேன்..

குவைத் திரும்பியதும் - வேலைத் தளத்தின் பணிகள் என்னை ஆக்ரமித்துக் கொண்டன..

ஆனாலும்,
அன்பின் அலைகளினால் - நெஞ்சம் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றது..

அன்புதான் இன்ப ஊற்று..
அது என்றைக்கும் சுரந்து கொண்டேயிருக்கும்..
நினைவுகளினால் நிறைந்து கொண்டேயிருக்கும்!..

என்றென்றும் 
வாழ்க நலம்..
* * *

17 கருத்துகள்:

  1. அன்பின் ஜி தங்கள் நலமுடன் குவைத் திரும்பியது அறிந்து மகிழ்ச்சி நணஅபரே கரந்தையார் அவர்களின் நூலைக்குறித்து எழுதியமை நன்று மேலும் தொடரட்டும் தங்களது ஆன்மீகத் தொண்டு.

    வாழ்க நலம் அன்புடன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான பயணம் முடித்து குவைத் திரும்பியது அறிந்தேன். ஒவ்வொரு பயணத்தின் போதும் தஞ்சை சென்று அங்குள்ள பதிவர்களைச் சந்திக்க வேண்டும் என நினைப்பேன்.. அடுத்த பயணத்திலாவது செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      கண்டிப்பாக தஞ்சைக்கு வாருங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  3. தங்களின் சிறப்பான பயணம் முடிந்து குவைத் சென்றதை தெரிந்து கொண்டேன் சார். நாளை எனது வலைப்பூ நான்காம் ஆண்டு தொடங்க இருக்கிறது. தேங்காய் பர்பியை சுவைக்க வலைப்பூவுக்கு வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நல்வாழ்த்துகளுடன் நிச்சயமாக வருகின்றேன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பயணம் அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மிக அருமையான பயணம் மேற்கொண்டு, ஆன்மீகப்பயணம், பதிவர் நண்பர்கள் சந்திப்பு என்று தங்கள் பயணம் இனிதாக இறைவனின் அருளால் நிறைவு பெற தாங்கள் மீண்டும் குவைத்தில். நல்ல சந்திப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அனைத்தும் இறையருள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான பயணம்...
    கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் புத்தகம் குறித்த செய்தி,
    நண்பர்கள் சந்திப்பு...
    குவைத் திரும்பியதில் மகிழ்ச்சி ஐயா,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      திரு..கில்லர் ஜி அவர்களுடன் பேசும்போதே தினார் தீர்ந்து விட்டது..
      தங்களுடன் பேச இயலாதது மிகவும் வருத்தமே..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம்,

    தாங்கள் ஆன்மீகச் செம்மல் தான்,, எத்துனை அளவிட முடியா தகவல்கள், அதன் தொடர்பான பாடல் வரிகள்,, அப்பப்பா,,,

    தங்களைச் சந்திக்காத பெரும் குறை என் மனதிலும்,, ஆனாலும் நேரில் பார்த்தேன். தொலைப்பேசியில் பேசினேன். அந்த மனநிறைவு உண்டு.

    நல்ல மனங்கள் நாளும் நலமடன் வாழ்க,,

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. தங்களைச் சந்தித்தது பெரு மகிழ்வு அளிக்கின்றது ஐயா
    உமாமகேசுவரம் நூலினைப் படித்து நேரமிருக்கும் பொழுது தங்களின் கருத்தினை வழங்குங்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. அருமையான மகா மகப் பயணம் முடிந்து திரும்பி விட்டீர்கள்.
    வாழ்க நலம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நலமாக வந்து சேர்ந்து விட்டேன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..